• Oct 31 2024

இலங்கையில் பல மாகாணங்களுக்கு கடுமையான மின்னல்- வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tamil nila / Oct 31st 2024, 6:42 pm
image

Advertisement

ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் இடியுடன் கூடிய மழையின் போது வயல்வெளிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்த பகுதிகளில் இருப்பதை தவிர்க்குமாறும், இடி மின்னல் பொழுதுகளில் தொலைபேசி மற்றும் இணைக்கப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது.

அதுமாத்திரமல்லாமல், திறந்தவெளி வாகனங்களான சைக்கிள், டிராக்டர், படகு போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து, மரங்கள், மின்கம்பிகள் விழும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



இலங்கையில் பல மாகாணங்களுக்கு கடுமையான மின்னல்- வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.மேலும் இடியுடன் கூடிய மழையின் போது வயல்வெளிகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்த பகுதிகளில் இருப்பதை தவிர்க்குமாறும், இடி மின்னல் பொழுதுகளில் தொலைபேசி மற்றும் இணைக்கப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது.அதுமாத்திரமல்லாமல், திறந்தவெளி வாகனங்களான சைக்கிள், டிராக்டர், படகு போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து, மரங்கள், மின்கம்பிகள் விழும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement