• May 09 2025

தேவாலயத்திற்கு செல்லாத சிறுமியை கடுமையாக தாக்கிய பங்குத் தந்தை..! யாழில் சம்பவம்

Chithra / Dec 5th 2023, 8:16 am
image


யாழ்ப்பாணம் - சாகவச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொடிகாமம்  பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுமியின் தந்தை கத்தோலிக்கராக உள்ளபோதும், தாயார் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் சிறுமி தேவாலயத்திற்குச் செல்வது கிடையாது. 

சிறுமி தந்தையாருடன் சில சமயம் தேவாலயம் சென்று வரும் பழக்கம் உடையவர் என்றும்,

இருந்தபோதும் கடந்த சில நாட்கள் தேவாலயம் செல்லாத சிறுமியை அழைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இதன் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை இன்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேவாலயத்திற்கு செல்லாத சிறுமியை கடுமையாக தாக்கிய பங்குத் தந்தை. யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் - சாகவச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம்  பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை கத்தோலிக்கராக உள்ளபோதும், தாயார் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் சிறுமி தேவாலயத்திற்குச் செல்வது கிடையாது. சிறுமி தந்தையாருடன் சில சமயம் தேவாலயம் சென்று வரும் பழக்கம் உடையவர் என்றும்,இருந்தபோதும் கடந்த சில நாட்கள் தேவாலயம் செல்லாத சிறுமியை அழைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதன் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை இன்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now