• May 02 2024

ஜனவரியில் சரவெடி...! இலங்கைக்கு வரவுள்ள இளையதளபதி விஜய்...! ரசிகர்கள் எழுச்சி...!samugammedia

Sharmi / Dec 29th 2023, 12:28 pm
image

Advertisement

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரும் இளையதளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவருமான விஜய் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில்  வெளியான இளையதளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம்  மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

லியோ திரைப்படம்   வெளியாகி முதல் நாளே உலகளவில் ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்தது.


இவ்வாறானதொரு நிலையில்,  விஜய்  'தளபதி 68 ' படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்துள்ளார்.

அதேவேளை  'தளபதி 68' இன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  'தளபதி 68 ' திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த படப்பிடிப்பு  ஜனவரி இரண்டாவது வாரத்தில்  ஆரம்பமாகவுள்ளதுடன்  'தளபதி 68' படக்குழுவினர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இந்நிலையில், இலங்கைக்கு வருகைதரவுள்ள நடிகர் விஜய்யினை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.









ஜனவரியில் சரவெடி. இலங்கைக்கு வரவுள்ள இளையதளபதி விஜய். ரசிகர்கள் எழுச்சி.samugammedia தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரும் இளையதளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவருமான விஜய் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில்  வெளியான இளையதளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம்  மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.லியோ திரைப்படம்   வெளியாகி முதல் நாளே உலகளவில் ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்தது.இவ்வாறானதொரு நிலையில்,  விஜய்  'தளபதி 68 ' படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்துள்ளார்.அதேவேளை  'தளபதி 68' இன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்  'தளபதி 68 ' திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த படப்பிடிப்பு  ஜனவரி இரண்டாவது வாரத்தில்  ஆரம்பமாகவுள்ளதுடன்  'தளபதி 68' படக்குழுவினர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.இந்நிலையில், இலங்கைக்கு வருகைதரவுள்ள நடிகர் விஜய்யினை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement