கல்பொத்தவல ஸ்ரீ பாத விகாரையில் இருந்து சிவனொளி பாத மலை யாத்திரை இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இன்று அதிகாலை குறித்த விகாரையில் இருந்து நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலைகள் என்பன ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது
அத்துடன், நல்லத்தண்ணி மற்றும் ஹட்டன் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று முதல் அடுத்த ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி வரை சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இடம்பெறவுள்ளது.
குறித்த இதே வேளை அங்கு கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபரினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்ந்த ஏனைய இடங்களில் வழிபாட்டு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய கூடாது எனவும் புகையிலை உள்ளிட்டவற்றை எடுத்து செல்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்.samugammedia கல்பொத்தவல ஸ்ரீ பாத விகாரையில் இருந்து சிவனொளி பாத மலை யாத்திரை இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இன்று அதிகாலை குறித்த விகாரையில் இருந்து நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலைகள் என்பன ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது அத்துடன், நல்லத்தண்ணி மற்றும் ஹட்டன் காவல்துறையினர் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இன்று முதல் அடுத்த ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி வரை சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இடம்பெறவுள்ளது. குறித்த இதே வேளை அங்கு கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்ட அரசாங்க அதிபரினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்ந்த ஏனைய இடங்களில் வழிபாட்டு பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய கூடாது எனவும் புகையிலை உள்ளிட்டவற்றை எடுத்து செல்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.