• Nov 12 2024

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சிவராத்திரி விழா...!

Sharmi / Mar 5th 2024, 9:56 am
image

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(08) மகா சிவராத்திரி விழா சிறப்பாக இடம்பெறும் என்று ஆலயத்தின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

குருந்தூர் மலை விகாராதிபதி எமது ஆலயத்தினை இலக்காக வைத்து சில கடும்போக்குவாதிகளை அழைத்துக்கொண்டு அண்மையில் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார். 

அவர் எதிர்வரும் சிவராத்திரி தினத்தன்று மக்களை அணிதிரட்டி அதனை குழப்பும் விதமான கருத்துக்களை முகநூலில் பகிர்ந்துள்ளார்.  

இவ்வாறு அவர் நடந்துகொள்கின்றமை மிகவும் வருத்தம் அளிக்கின்றது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமானது தொன்று தொட்டு எமது மக்களால் வழிபடப்பட்டுவந்த ஒரு ஆலயம். பௌத்த கடும்போக்குவாதிகளின் தூண்டுதலின் பெயரிலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிகின்றது. 

இருப்பினும் எதிர்வரும் மகாசிவராத்திவிழா மிகவும் சிறப்புற இடம்பெறும் என அனைத்து மக்களிற்கும் தெரியப்படுத்துகின்றோம் என்றார்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சிவராத்திரி விழா. வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(08) மகா சிவராத்திரி விழா சிறப்பாக இடம்பெறும் என்று ஆலயத்தின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குருந்தூர் மலை விகாராதிபதி எமது ஆலயத்தினை இலக்காக வைத்து சில கடும்போக்குவாதிகளை அழைத்துக்கொண்டு அண்மையில் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் எதிர்வரும் சிவராத்திரி தினத்தன்று மக்களை அணிதிரட்டி அதனை குழப்பும் விதமான கருத்துக்களை முகநூலில் பகிர்ந்துள்ளார்.  இவ்வாறு அவர் நடந்துகொள்கின்றமை மிகவும் வருத்தம் அளிக்கின்றது.வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமானது தொன்று தொட்டு எமது மக்களால் வழிபடப்பட்டுவந்த ஒரு ஆலயம். பௌத்த கடும்போக்குவாதிகளின் தூண்டுதலின் பெயரிலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிகின்றது. இருப்பினும் எதிர்வரும் மகாசிவராத்திவிழா மிகவும் சிறப்புற இடம்பெறும் என அனைத்து மக்களிற்கும் தெரியப்படுத்துகின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement