மட்டக்களப்பு நகரில் நேற்று வியாழக்கிழமை இரவு 16 வயது சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்ல முயன்ற சம்பவத்தில், சிறுமியின் தந்தையின் அதீத துரித நடவடிக்கையால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. கடத்தல்காரர்களில் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட நிலையில், மற்றொருவர் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று இரவு 7.00 மணியளவில், சிறுமியை ஆங்கில வகுப்பிற்காக அவரது தந்தை காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
பலத்த மழை காரணமாக வகுப்பு நடைபெறாது என ஆசிரியர் தெரிவித்ததைத் தொடர்ந்து, நகரில் உள்ள தனது சிறிய தாயார் வீட்டிற்கு செல்லும் பாதையில், காரிலிருந்து சிறுமியை தந்தை இறக்கிவிட்டுள்ளார்.
சிறிது நேரத்தில், சிறுமி வீட்டிற்கு வரவில்லை என உறவினர் தகவலளித்ததும் அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாக அங்கு விரைந்துள்ளார்.
தந்தை வருவதைக் கண்டதும் அங்கு நின்றிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வேகமாகத் தப்பியோடியுள்ளது.
சந்தேகமடைந்த தந்தை தனது காரில் அதனைத் துரத்திச் சென்று, ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் மடக்கிப் பிடித்துள்ளார்.
இதன்போது முச்சக்கர வண்டியைச் செலுத்தி சென்ற இளைஞன் அதனை விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் சிறுமி மயக்கமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்ட தந்தை, அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
சிறுமிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய வைத்தியர்கள், அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
இதற்கிடையில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை மீட்டுச் செல்வதற்காக மற்றுமொரு இளைஞர் அங்கு வந்துள்ளார்.
"இந்த முச்சக்கர வண்டி என்னுடையது, எனது நண்பனே இதனை இங்கு கொண்டு வந்தார்" எனக் கூறி அதனை எடுத்துச் செல்ல முயன்றபோது அங்கிருந்தவர்களுடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த இளைஞர், "நானே பொலிஸாருக்கு அழைக்கின்றேன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எனது நண்பர்" எனக் கூறி பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த 21 வயதுடைய பிரதான கடத்தல்காரனை பொலிஸார் இரவு 11.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புக்களுக்குச் செல்லும் சிறுமிகளைக் குறிவைத்து, அவர்களைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாக்கும் இளைஞர் குழு ஒன்று செயற்பட்டு வருவதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்; சிறுமியை கடத்த முயற்சி – தந்தையின் துரித செயல் மட்டக்களப்பு நகரில் நேற்று வியாழக்கிழமை இரவு 16 வயது சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்ல முயன்ற சம்பவத்தில், சிறுமியின் தந்தையின் அதீத துரித நடவடிக்கையால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. கடத்தல்காரர்களில் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட நிலையில், மற்றொருவர் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு 7.00 மணியளவில், சிறுமியை ஆங்கில வகுப்பிற்காக அவரது தந்தை காரில் அழைத்துச் சென்றுள்ளார்.பலத்த மழை காரணமாக வகுப்பு நடைபெறாது என ஆசிரியர் தெரிவித்ததைத் தொடர்ந்து, நகரில் உள்ள தனது சிறிய தாயார் வீட்டிற்கு செல்லும் பாதையில், காரிலிருந்து சிறுமியை தந்தை இறக்கிவிட்டுள்ளார்.சிறிது நேரத்தில், சிறுமி வீட்டிற்கு வரவில்லை என உறவினர் தகவலளித்ததும் அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாக அங்கு விரைந்துள்ளார்.தந்தை வருவதைக் கண்டதும் அங்கு நின்றிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வேகமாகத் தப்பியோடியுள்ளது. சந்தேகமடைந்த தந்தை தனது காரில் அதனைத் துரத்திச் சென்று, ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் மடக்கிப் பிடித்துள்ளார்.இதன்போது முச்சக்கர வண்டியைச் செலுத்தி சென்ற இளைஞன் அதனை விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் சிறுமி மயக்கமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்ட தந்தை, அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.சிறுமிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய வைத்தியர்கள், அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர்.இதற்கிடையில், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை மீட்டுச் செல்வதற்காக மற்றுமொரு இளைஞர் அங்கு வந்துள்ளார். "இந்த முச்சக்கர வண்டி என்னுடையது, எனது நண்பனே இதனை இங்கு கொண்டு வந்தார்" எனக் கூறி அதனை எடுத்துச் செல்ல முயன்றபோது அங்கிருந்தவர்களுடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.அப்போது அந்த இளைஞர், "நானே பொலிஸாருக்கு அழைக்கின்றேன், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எனது நண்பர்" எனக் கூறி பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.இதனைத் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த 21 வயதுடைய பிரதான கடத்தல்காரனை பொலிஸார் இரவு 11.00 மணியளவில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு நகரில் பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புக்களுக்குச் செல்லும் சிறுமிகளைக் குறிவைத்து, அவர்களைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாக்கும் இளைஞர் குழு ஒன்று செயற்பட்டு வருவதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.