அமெரிக்காவின் மிச்சிக்கன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆராதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதுடன் ஆலயத்திற்கு தீயும் வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பெர்டன் நகரத்தைச் சேர்ந்த 40 வயதான தாமஸ் ஜேக்கப் சான்போர்டு என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் போட்லண்டின், ஒரிகனில் தேசிய காவல்படை நிறுவப்படவுள்ளது.
சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மையங்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இராணுவத்தினர் ஒரிகனுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி முன்னதாக அறிவித்திருந்தார்.
அமெரிக்காவில் துப்பாக்கிசூடு; பற்றிஎரிந்த தேவாலயம் நால்வர் பலி அமெரிக்காவின் மிச்சிக்கன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆராதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதுடன் ஆலயத்திற்கு தீயும் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.பெர்டன் நகரத்தைச் சேர்ந்த 40 வயதான தாமஸ் ஜேக்கப் சான்போர்டு என்பவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.தாக்குதலுக்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவைத் தொடர்ந்து, அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் போட்லண்டின், ஒரிகனில் தேசிய காவல்படை நிறுவப்படவுள்ளது. சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மையங்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இராணுவத்தினர் ஒரிகனுக்கு அனுப்பப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி முன்னதாக அறிவித்திருந்தார்.