• Oct 02 2025

இராணுவ காணியிலிருந்து கலைந்த குளவிகள் தாக்கியதில் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Sep 29th 2025, 11:14 am
image

முல்லைத்தீவு - விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மற்றும் விசுவமடு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது குளவி தாக்கிய சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

12ஆம் கட்டை தபால் நிலைய வீதி பகுதியில் இராணுவத்தினரால் தோட்டம் செய்யப்படும் காணியிலுள்ள மா மரத்தில் இருந்த குளவிகள் கலைந்து கொட்டியதால் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். 

இவ்வாறு காயமடைந்த மாணவர்கள் உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குளவி தாக்குதலுக்குள்ளான மாணவர்களின் நலன் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.


இராணுவ காணியிலிருந்து கலைந்த குளவிகள் தாக்கியதில் 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி முல்லைத்தீவு - விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மற்றும் விசுவமடு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது குளவி தாக்கிய சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.12ஆம் கட்டை தபால் நிலைய வீதி பகுதியில் இராணுவத்தினரால் தோட்டம் செய்யப்படும் காணியிலுள்ள மா மரத்தில் இருந்த குளவிகள் கலைந்து கொட்டியதால் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்த மாணவர்கள் உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் குளவி தாக்குதலுக்குள்ளான மாணவர்களின் நலன் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement