சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதன பொருட்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து நேற்றையதினம் பிற்பகல் 02.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து இந்த அழகுசாதன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
50 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதன பொருட்களுடன் சிக்கிய வர்த்தகர் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதன பொருட்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து நேற்றையதினம் பிற்பகல் 02.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து இந்த அழகுசாதன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.