• Nov 26 2024

சத்திரசிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறை...! ஆபத்தில் நோயாளிகள்...! விடுக்கப்பட்ட எச்சரிக்கை...!

Sharmi / Jul 3rd 2024, 1:48 pm
image

இதய சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் காத்திருப்பு காலம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

ஆனால், நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான இருதய சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் இருப்பதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சில வைத்தியசாலைகளில் காத்திருப்போர் பட்டியல் 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்குமெனவும், இது தொடர்பில் அவதானம் செலுத்தி அரச மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து சத்திர சிகிச்சைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

சத்திரசிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறை. ஆபத்தில் நோயாளிகள். விடுக்கப்பட்ட எச்சரிக்கை. இதய சத்திர சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் காத்திருப்பு காலம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.நாட்டில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான இருதய சத்திரசிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் இருப்பதால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்க வேண்டியுள்ளது.இதனால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.சில வைத்தியசாலைகளில் காத்திருப்போர் பட்டியல் 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்குமெனவும், இது தொடர்பில் அவதானம் செலுத்தி அரச மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து சத்திர சிகிச்சைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement