• Feb 10 2025

தங்க நகைகளை அடகு வைக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை..!

Chithra / Jul 3rd 2024, 2:24 pm
image

 

போலி தங்க நகைகளை பயன்படுத்தி 19,670,000 ரூபாவை மோசடி செய்த  நபரை பதுளை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.  

பதுளையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தங்க நகைகளை அடகு வைக்கும் பிரிவின் அதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் செய்த முறைப்பாட்டின்  அடிப்படையில் பொலிஸார் இந்த விடயம் தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையின் போது சந்தேகநபரிடம் இருந்து 41 போலி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

அத்துடன்  இந்த நிதி நிறுவனத்திற்கு பல்வேறு நபர்கள் வந்து நகைகளை அடகு வைத்த போது, சந்தேக நபர் அவர்களிடம்  போலியான ஆவணங்களை வழங்கியுள்ளார். 

அதன்பின் அந்த நகைகளுக்கு சமமான போலி நகைகளை இணையம் மூலம்  இறக்குமதி செய்து அதனை குறிப்பிட்ட நகையின் பைகளில் இட்டு  உண்மையான  நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடர்பான வட்டியை சந்தேகநபர் அதன் உரிமையாளர்களின் பெயரில் செலுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தங்க நகைகளை அடகு வைக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை.  போலி தங்க நகைகளை பயன்படுத்தி 19,670,000 ரூபாவை மோசடி செய்த  நபரை பதுளை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.  பதுளையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் தங்க நகைகளை அடகு வைக்கும் பிரிவின் அதிகாரி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் செய்த முறைப்பாட்டின்  அடிப்படையில் பொலிஸார் இந்த விடயம் தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.விசாரணையின் போது சந்தேகநபரிடம் இருந்து 41 போலி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  அத்துடன்  இந்த நிதி நிறுவனத்திற்கு பல்வேறு நபர்கள் வந்து நகைகளை அடகு வைத்த போது, சந்தேக நபர் அவர்களிடம்  போலியான ஆவணங்களை வழங்கியுள்ளார். அதன்பின் அந்த நகைகளுக்கு சமமான போலி நகைகளை இணையம் மூலம்  இறக்குமதி செய்து அதனை குறிப்பிட்ட நகையின் பைகளில் இட்டு  உண்மையான  நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடர்பான வட்டியை சந்தேகநபர் அதன் உரிமையாளர்களின் பெயரில் செலுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement