மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணையும் குழந்தையையும் மோதி விட்டு பயணித்த கார் மீது கடுவெல பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை கடுவெலை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலே இடம்பெற்றுள்ளது.
இன்று காலை பெண் ஒருவரும் குழந்தையும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற மற்றுமொரு கார் மோட்டார் சைக்கிளை பல தடவைகள் மோதி விபத்து ஏற்படுத்த முயற்சித்துள்ளது.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து விபத்திற்குள்ளான அந்தப் பெண் கதறி அழ ஆரம்பித்ததும், கடுவெல பொலிஸ் உத்தியோகத்தர்கள் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
எனினும், அந்த இடத்தில் இருந்து கார் தப்பிச் சென்றுள்ளது.
38 வயதான பெண் மோட்டார் சைக்கிள் சாரதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தை கைப்பற்றுவதற்கும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கும் பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெண் ஒருவரை மோதி விட்டு ஓடிய கார் மீது துப்பாக்கிச் சூடு. மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணையும் குழந்தையையும் மோதி விட்டு பயணித்த கார் மீது கடுவெல பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் இன்று காலை கடுவெலை பொலிஸ் நிலையத்திற்கு அருகிலே இடம்பெற்றுள்ளது.இன்று காலை பெண் ஒருவரும் குழந்தையும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற மற்றுமொரு கார் மோட்டார் சைக்கிளை பல தடவைகள் மோதி விபத்து ஏற்படுத்த முயற்சித்துள்ளது.குறித்த சம்பவத்தை தொடர்ந்து விபத்திற்குள்ளான அந்தப் பெண் கதறி அழ ஆரம்பித்ததும், கடுவெல பொலிஸ் உத்தியோகத்தர்கள் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.எனினும், அந்த இடத்தில் இருந்து கார் தப்பிச் சென்றுள்ளது. 38 வயதான பெண் மோட்டார் சைக்கிள் சாரதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தை கைப்பற்றுவதற்கும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கும் பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.