• Dec 03 2024

நீட் தேர்வில் இருந்து விலக்கவேண்டும் - அரங்கத்தையே அதிர வைத்த விஜயின் பேச்சு...!

Anaath / Jul 3rd 2024, 3:39 pm
image

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிப்பதாக்க நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். 

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் நடிகர் விஜயின் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு  பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீட் தேர்வால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறினார். 

அத்துடன் மத்திய அரசை ஒன்றியம் என குறிப்பிட்டார். மேலும், ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரானது என்று விமர்சித்தார். வேற்றுமை தான் பலம் என்று கூறிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து நடத்தப்படும் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார். அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேட்டால் அதன் மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்து விட்டதாகவும்  விஜய் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீட்டிற்கு எதிராக தமிழ்நாடு அரசு இயற்றிய தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளதுடன்   கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய விஜய், உடனடியாக சிறப்பு பொதுப்பட்டியலுக்காவது அதனை கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

அத்துடன்  வாய்ப்புகள் ஏராளமாக இருப்பதாக கூறிய விஜய், மாணவர்கள் அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக படிக்க வேண்டும் என்றும் கடவுள் ஏதேனும் வாய்ப்பை வைத்திருப்பார் என்றும் அறிவுரை வழங்கினார்.


நீட் தேர்வில் இருந்து விலக்கவேண்டும் - அரங்கத்தையே அதிர வைத்த விஜயின் பேச்சு. நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மனப்பூர்வமாக ஆதரிப்பதாக்க நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் நடிகர் விஜயின் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு  பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீட் தேர்வால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறினார். அத்துடன் மத்திய அரசை ஒன்றியம் என குறிப்பிட்டார். மேலும், ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரானது என்று விமர்சித்தார். வேற்றுமை தான் பலம் என்று கூறிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து நடத்தப்படும் நீட் தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பினார். அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேட்டால் அதன் மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்து விட்டதாகவும்  விஜய் தெரிவித்துள்ளார்.அத்துடன் நீட்டிற்கு எதிராக தமிழ்நாடு அரசு இயற்றிய தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளதுடன்   கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய விஜய், உடனடியாக சிறப்பு பொதுப்பட்டியலுக்காவது அதனை கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.அத்துடன்  வாய்ப்புகள் ஏராளமாக இருப்பதாக கூறிய விஜய், மாணவர்கள் அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக படிக்க வேண்டும் என்றும் கடவுள் ஏதேனும் வாய்ப்பை வைத்திருப்பார் என்றும் அறிவுரை வழங்கினார்.

Advertisement

Advertisement

Advertisement