உடற்பயிற்சியின் போது வியர்க்க வேண்டும் என்று கூறுவது தவறு என உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மருத்துவத்துறை பேராசிரியர் சதுரங்க ரணசிங்க கூறுகிறார்.
நேற்று (18) இலங்கை மருத்துவ சங்கம் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு தொடர்பாக நடத்திய கலந்துரையாடலின் போது,
இதனை தெளிவுபடுத்திய பேராசிரியர், உடற்பயிற்சியை முறையாகவும், படிப்படியாகவும் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
குளிரூட்டப்பட்ட இடங்களில் உடற்பயிற்சி செய்யும் போது அதிக வியர்வை ஏற்படாது என்று கூறிய பேராசிரியர், உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம் என்றும் கூறினார்.
மேலும், உடற்பயிற்சியை தொடங்கும் போது குறைந்த வேகத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும், பின்னர் பல்வேறு பயிற்சிகளை முறையாக படிப்படியாக செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் கூறினார்.
அவ்வாறு இல்லாத சமயங்களில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதாகவும், சிறுநீரின் நிறத்தை வைத்தே ஒருவருக்கு நீர்ச்சத்து குறைபாடு உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என்றும் அவர் கூறினார்.
ஆரோக்கியமான ஒருவர் தினமும் சுமார் முந்நூறு நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது முக்கியம் என்றும் சிறு குழந்தைகள் சுமார் அறுபது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
உடற்பயிற்சி செய்யும் போது வியர்க்க கூடாதா. மருத்துவர் விடுத்த எச்சரிக்கை உடற்பயிற்சியின் போது வியர்க்க வேண்டும் என்று கூறுவது தவறு என உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மருத்துவத்துறை பேராசிரியர் சதுரங்க ரணசிங்க கூறுகிறார்.நேற்று (18) இலங்கை மருத்துவ சங்கம் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு தொடர்பாக நடத்திய கலந்துரையாடலின் போது, இதனை தெளிவுபடுத்திய பேராசிரியர், உடற்பயிற்சியை முறையாகவும், படிப்படியாகவும் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.குளிரூட்டப்பட்ட இடங்களில் உடற்பயிற்சி செய்யும் போது அதிக வியர்வை ஏற்படாது என்று கூறிய பேராசிரியர், உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம் என்றும் கூறினார். மேலும், உடற்பயிற்சியை தொடங்கும் போது குறைந்த வேகத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும், பின்னர் பல்வேறு பயிற்சிகளை முறையாக படிப்படியாக செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் கூறினார்.அவ்வாறு இல்லாத சமயங்களில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதாகவும், சிறுநீரின் நிறத்தை வைத்தே ஒருவருக்கு நீர்ச்சத்து குறைபாடு உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என்றும் அவர் கூறினார்.ஆரோக்கியமான ஒருவர் தினமும் சுமார் முந்நூறு நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது முக்கியம் என்றும் சிறு குழந்தைகள் சுமார் அறுபது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.