• May 16 2026

சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மூதூரில் சிரமதானம்.!

shanu / Jun 2nd 2025, 3:06 pm
image

மூதூர் - தோப்பூர் - அல்லைநகர் மேற்குப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.


கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு  இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


இதன்போது கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றும் அரச பல்தேவை கட்டிட வளாகம் பொதுமக்களால் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.


சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மூதூரில் சிரமதானம். மூதூர் - தோப்பூர் - அல்லைநகர் மேற்குப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு  இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றும் அரச பல்தேவை கட்டிட வளாகம் பொதுமக்களால் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement