• Jan 13 2025

காற்றுக் கொந்தளிப்பு குறித்த தரவுப் பகிர்வு தளத்தில் எஸ்.ஐ.ஏ இணைந்தது !

Tharmini / Dec 11th 2024, 10:31 am
image

காற்றுக் கொந்தளிப்பு குறித்த தரவுப் பகிர்வு தளத்தில் எஸ்.ஐ.ஏ இணைந்தது.

காற்றுக் கொந்தளிப்பு குறித்து நிகழ்நேர தரவுகளைப் பரிமாறிக்கொள்ள.

25க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இடம்பெறும் உலகளாவிய தளம் ஒன்றில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) சேர்ந்துள்ளது.

மேலும், காற்றுக் கொந்தளிப்பு உள்ள பாதைகளைத் தவிர்க்க விமானிகளுக்கு மேலும் ஒரு வழியை இந்த ஏற்பாடு அமைத்துத் தரும்.

மியன்மார் ஆகாயவெளியில் லண்டன்-சிங்கப்பூர் எஸ்ஐஏ விமானம் ஒன்று கடுமையான காற்றுக் கொந்தளிப்பை எதிர்கொண்டு ஐந்து மாதங்களான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அச்சம்பவத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமுற்றனர்.

மேலும், அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் (Iata) காற்றுக் கொந்தளிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அந்தத் தளத்தில் (Turbulence Aware) அண்மையில் பதிவுசெய்துகொண்ட நான்கு விமான நிறுவனங்களில் எஸ்ஐஏவும் அதன் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட்டும் அடங்கும்.

தென்கொரியாவின் ஏஷியான ஏர்லைன்சும் பிரிட்டிஷ் ஏர்வேசும் இதர இரு விமான நிறுவனங்கள் என சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்த உலகளாவிய ஊடக தின நிகழ்வில் சங்கம் நேற்று (10) இதனை அறிவித்தது.

2024ல் இதுவரை இந்தத் தளத்தில் ஆறு விமான நிறுவனங்கள் இணைந்துள்ளன. ஹாங்காங்கின் கேத்தே பசிபிக்கும் துபாயைச் சேர்ந்த எமிரேட்சும் இவ்வாண்டு முன்னதாக இதில் சேர்ந்திருந்தன.

காற்றுக் கொந்தளிப்பு குறித்த தரவுப் பகிர்வு தளத்தில் எஸ்.ஐ.ஏ இணைந்தது காற்றுக் கொந்தளிப்பு குறித்த தரவுப் பகிர்வு தளத்தில் எஸ்.ஐ.ஏ இணைந்தது.காற்றுக் கொந்தளிப்பு குறித்து நிகழ்நேர தரவுகளைப் பரிமாறிக்கொள்ள.25க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இடம்பெறும் உலகளாவிய தளம் ஒன்றில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) சேர்ந்துள்ளது.மேலும், காற்றுக் கொந்தளிப்பு உள்ள பாதைகளைத் தவிர்க்க விமானிகளுக்கு மேலும் ஒரு வழியை இந்த ஏற்பாடு அமைத்துத் தரும்.மியன்மார் ஆகாயவெளியில் லண்டன்-சிங்கப்பூர் எஸ்ஐஏ விமானம் ஒன்று கடுமையான காற்றுக் கொந்தளிப்பை எதிர்கொண்டு ஐந்து மாதங்களான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அச்சம்பவத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமுற்றனர்.மேலும், அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் (Iata) காற்றுக் கொந்தளிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அந்தத் தளத்தில் (Turbulence Aware) அண்மையில் பதிவுசெய்துகொண்ட நான்கு விமான நிறுவனங்களில் எஸ்ஐஏவும் அதன் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட்டும் அடங்கும்.தென்கொரியாவின் ஏஷியான ஏர்லைன்சும் பிரிட்டிஷ் ஏர்வேசும் இதர இரு விமான நிறுவனங்கள் என சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்த உலகளாவிய ஊடக தின நிகழ்வில் சங்கம் நேற்று (10) இதனை அறிவித்தது.2024ல் இதுவரை இந்தத் தளத்தில் ஆறு விமான நிறுவனங்கள் இணைந்துள்ளன. ஹாங்காங்கின் கேத்தே பசிபிக்கும் துபாயைச் சேர்ந்த எமிரேட்சும் இவ்வாண்டு முன்னதாக இதில் சேர்ந்திருந்தன.

Advertisement

Advertisement

Advertisement