• Feb 27 2026

மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம்

Chithra / Feb 25th 2026, 7:27 pm
image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் (PSTA) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னார் மாவட்டத்தில் இன்று (25) பாரிய கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் மீனவ சங்கப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

நீண்டகாலமாக நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்க வேண்டும்.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள PSTA சட்ட வரைவைத் திரும்பப் பெற வேண்டும்.

ஊடக சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும், நீதித்துறையின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் மனித மாண்பு பேணப்பட வேண்டும்.அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணான மற்றும் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் எதிராகக் குரல் கொடுப்போம் என இந்தக் கையெழுத்துப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள்  பிரதான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

"உயிர் வாழ்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்" மற்றும் "மக்கள் நலன் கருதி ஒருமைப்பாட்டுடன் செயற்படுவோம்" போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களைத் தாங்கியவாறு, மக்கள் ஜனநாயக ரீதியிலான இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அரசாங்கம் கொண்டுவரத் துடிக்கும் புதிய சட்டங்கள் மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.



மன்னாரில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் (PSTA) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னார் மாவட்டத்தில் இன்று (25) பாரிய கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் மீனவ சங்கப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.நீண்டகாலமாக நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்க வேண்டும்.தற்போது முன்மொழியப்பட்டுள்ள PSTA சட்ட வரைவைத் திரும்பப் பெற வேண்டும்.ஊடக சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும், நீதித்துறையின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் மனித மாண்பு பேணப்பட வேண்டும்.அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணான மற்றும் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் எதிராகக் குரல் கொடுப்போம் என இந்தக் கையெழுத்துப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள்  பிரதான கோரிக்கைகளை முன்வைத்தனர்."உயிர் வாழ்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்" மற்றும் "மக்கள் நலன் கருதி ஒருமைப்பாட்டுடன் செயற்படுவோம்" போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களைத் தாங்கியவாறு, மக்கள் ஜனநாயக ரீதியிலான இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.அரசாங்கம் கொண்டுவரத் துடிக்கும் புதிய சட்டங்கள் மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement