• May 18 2024

அமைச்சர் கெஹெலியவை பதவியிலிருந்து நீக்கக்கோரி கையெழுத்து வேட்டை ஆரம்பம்!

Chithra / Feb 5th 2024, 3:54 pm
image

Advertisement


 

 அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை உடனடியாக, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து திரட்டும் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2 ஆம் திகதி முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், சுற்றாடல் துறை அமைச்சுப் பதவியிலிருந்து உடனடியாக கெஹலிய ரம்புக்வெல்லவை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று கையெழுத்து திரட்டும் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் ஊழல் – மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஒருவர் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியில் நீடிக்க இடமளிக்க முடியாது என, கையெழுத்து திரட்டும் போராட்டத்தை ஏற்பாடு செய்த சிவில் சமூக அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்


அமைச்சர் கெஹெலியவை பதவியிலிருந்து நீக்கக்கோரி கையெழுத்து வேட்டை ஆரம்பம்   அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை உடனடியாக, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து திரட்டும் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 2 ஆம் திகதி முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டிருந்தார்.அவரை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த நிலையில், சுற்றாடல் துறை அமைச்சுப் பதவியிலிருந்து உடனடியாக கெஹலிய ரம்புக்வெல்லவை நீக்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று கையெழுத்து திரட்டும் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.மேலும் ஊழல் – மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஒருவர் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியில் நீடிக்க இடமளிக்க முடியாது என, கையெழுத்து திரட்டும் போராட்டத்தை ஏற்பாடு செய்த சிவில் சமூக அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement