• Jun 18 2024

பொதுமக்களுக்கான சேவையை உரியவாறு நிறைவேற்றுவதே அரச உத்தியோகஸ்தர்களின் கடமை...! வடக்கு ஆளுநர் வலியுறுத்து...!samugammedia

Sharmi / Feb 5th 2024, 3:41 pm
image

Advertisement

அரச சேவையில் இணைந்துக்கொள்ளும் அனைவரும் பொதுமக்களுக்காக செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பங்கேற்புடன், யாழ் மத்திய கல்லூரியில் இன்று(05) நடைபெற்றது. 

இதன்போதே வட மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச சேவையில் இணைந்து கொள்ளும் அனைவரும் பொதுமக்களுக்காக செயற்பட வேண்டும்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச உத்தியோகஸ்தர்கள், மக்களுக்காகவே சேவையாற்ற கடமைப்பட்டுள்ளதாகவும், அத்துடன் மாகாணத்தில் ஆசிரியர், அதிபர்களின் வெற்றிடங்கள் காணப்படும் பகுதிகளுக்கு சென்று சேவை செய்ய வேண்டும் எனவும்  ஆளுநர் தெரிவித்தார்.

 இந்த விடயங்களை கருத்திற்கொண்டு இனிவரும் காலங்களில் அரச அதிகாரிகள் செயற்படுவார்கள் என நம்புவதாகவும் வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.


பொதுமக்களுக்கான சேவையை உரியவாறு நிறைவேற்றுவதே அரச உத்தியோகஸ்தர்களின் கடமை. வடக்கு ஆளுநர் வலியுறுத்து.samugammedia அரச சேவையில் இணைந்துக்கொள்ளும் அனைவரும் பொதுமக்களுக்காக செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பங்கேற்புடன், யாழ் மத்திய கல்லூரியில் இன்று(05) நடைபெற்றது. இதன்போதே வட மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அரச சேவையில் இணைந்து கொள்ளும் அனைவரும் பொதுமக்களுக்காக செயற்பட வேண்டும்.மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச உத்தியோகஸ்தர்கள், மக்களுக்காகவே சேவையாற்ற கடமைப்பட்டுள்ளதாகவும், அத்துடன் மாகாணத்தில் ஆசிரியர், அதிபர்களின் வெற்றிடங்கள் காணப்படும் பகுதிகளுக்கு சென்று சேவை செய்ய வேண்டும் எனவும்  ஆளுநர் தெரிவித்தார். இந்த விடயங்களை கருத்திற்கொண்டு இனிவரும் காலங்களில் அரச அதிகாரிகள் செயற்படுவார்கள் என நம்புவதாகவும் வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement