• Jan 08 2025

சில்ப அபிமானி' - ஜனாதிபதி விருது வென்ற : வட மாகாணக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Tharmini / Jan 1st 2025, 4:55 pm
image

உள்ளூர் கைப்பணிக் கலைஞர்களுடைய திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில், கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலுடன் தேசிய அருங்கலைகள் பேரவையால் வருடாந்தம் நடத்தப்படும் 'சில்ப அபிமானி' - ஜனாதிபதி விருது தேசிய கைப்பணிப் போட்டியில் வெற்றிபெற்ற வடக்கு மாகாணக் கலைஞர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (01) இடம்பெற்றது. 

வடக்கு மாகாணத்திலிருந்து 119 ஆக்கங்கள் தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் 29 பேர் விருதுகளைப் பெற்றுள்ளனர். 

முதற்தடவையாக தங்கவிருது வடக்கு மாகாணத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் தேசிய ரீதியில் இரண்டு தங்க விருதுகளே வழங்கப்படும் நிலையில் அவற்றில் ஒன்றை வடக்கு மாகாணம் சுவீகரித்துள்ளது. 

இந்தக் கலைஞர்களைப் பாராட்டிய ஆளுநர், தொடர்ந்தும் வடக்கு மாகாணத்துக்கு அவர்கள் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் கோரினார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் செ.வனஜாவும் கலந்துகொண்டிருந்தார். 








சில்ப அபிமானி' - ஜனாதிபதி விருது வென்ற : வட மாகாணக் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு உள்ளூர் கைப்பணிக் கலைஞர்களுடைய திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில், கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலுடன் தேசிய அருங்கலைகள் பேரவையால் வருடாந்தம் நடத்தப்படும் 'சில்ப அபிமானி' - ஜனாதிபதி விருது தேசிய கைப்பணிப் போட்டியில் வெற்றிபெற்ற வடக்கு மாகாணக் கலைஞர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (01) இடம்பெற்றது. வடக்கு மாகாணத்திலிருந்து 119 ஆக்கங்கள் தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் 29 பேர் விருதுகளைப் பெற்றுள்ளனர். முதற்தடவையாக தங்கவிருது வடக்கு மாகாணத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் தேசிய ரீதியில் இரண்டு தங்க விருதுகளே வழங்கப்படும் நிலையில் அவற்றில் ஒன்றை வடக்கு மாகாணம் சுவீகரித்துள்ளது. இந்தக் கலைஞர்களைப் பாராட்டிய ஆளுநர், தொடர்ந்தும் வடக்கு மாகாணத்துக்கு அவர்கள் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் கோரினார்.இந்த நிகழ்வில் வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் செ.வனஜாவும் கலந்துகொண்டிருந்தார். 

Advertisement

Advertisement

Advertisement