• Sep 21 2024

தமிழினத்தின் இருப்பை கேள்விகுறியாக்க முயற்சிக்கும் சிங்கள தலைவர்கள் - எம்.பி குற்றச்சாட்டு

Chithra / Feb 4th 2023, 3:16 pm
image

Advertisement

இந்த நாட்டின் சுதந்திரம் என்று சொல்லப்படுகின்ற போது ஒரு இனத்தை மட்டும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒரு அநாதைகளாக வாழுகின்ற சூழலே காணப்படுவதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தள்ளார்.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை இருள்சூழ்ந்த சுதந்திரம் என பிரகடனப்படுத்தி இலங்கை தமிழரசுக்கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்த நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இந்த நாட்டின் விடுதலைக்காக தமிழர்களும் போராடியிருந்த நிலையில் இன்று இந்த இனம் சிங்கள அரச தலைவர்களால் அழிக்கப்பட்ட வரலாறுகளே தற்போதும் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக தவராசா கலையரசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றும் தமிழ் மக்களின் வாழ்விடங்களை கேள்விக்குறியாக்கு நிலைமையே தொடர்ந்த வண்ணமுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவி காலத்தை நிறைவு செய்யும் நோக்குடன் இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்போவதாக கூறி காலத்தை இழுத்தடிப்பு செய்யவே முயற்சிப்பதாக தவராசா கலையரசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழினத்தின் இருப்பை கேள்விகுறியாக்க முயற்சிக்கும் சிங்கள தலைவர்கள் - எம்.பி குற்றச்சாட்டு இந்த நாட்டின் சுதந்திரம் என்று சொல்லப்படுகின்ற போது ஒரு இனத்தை மட்டும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒரு அநாதைகளாக வாழுகின்ற சூழலே காணப்படுவதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தள்ளார்.இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை இருள்சூழ்ந்த சுதந்திரம் என பிரகடனப்படுத்தி இலங்கை தமிழரசுக்கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இந்த நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இந்த நாட்டின் விடுதலைக்காக தமிழர்களும் போராடியிருந்த நிலையில் இன்று இந்த இனம் சிங்கள அரச தலைவர்களால் அழிக்கப்பட்ட வரலாறுகளே தற்போதும் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக தவராசா கலையரசன் சுட்டிக்காட்டியுள்ளார்.இன்றும் தமிழ் மக்களின் வாழ்விடங்களை கேள்விக்குறியாக்கு நிலைமையே தொடர்ந்த வண்ணமுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவி காலத்தை நிறைவு செய்யும் நோக்குடன் இனப்பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்போவதாக கூறி காலத்தை இழுத்தடிப்பு செய்யவே முயற்சிப்பதாக தவராசா கலையரசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement