• May 20 2024

குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்கும் சினொபெக்...!

Chithra / Jan 1st 2024, 9:28 am
image

Advertisement

 

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளின்படி, சினோபெக் நிறுவனமும் இன்று (01) காலை முதல் எரிபொருள் விலைகளை திருத்தம் செய்திருந்தது.

எனினும் புத்தாண்டை முன்னிட்டு ஒக்டேன் 92 மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை 3 ரூபாவால் குறைத்து சலுகை வழங்கியுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 363 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.

பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் ஆகியவற்றின் விலைகளின்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 366 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

சினோபெக் வெளியிட்ட இந்த புதிய விலைகள் அடுத்த எரிபொருள் விலை திருத்தம் வரை அமுலில் இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவிக்கிறது.

குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்கும் சினொபெக்.  பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளின்படி, சினோபெக் நிறுவனமும் இன்று (01) காலை முதல் எரிபொருள் விலைகளை திருத்தம் செய்திருந்தது.எனினும் புத்தாண்டை முன்னிட்டு ஒக்டேன் 92 மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை 3 ரூபாவால் குறைத்து சலுகை வழங்கியுள்ளது.இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 363 ரூபாவாகும்.இதேவேளை, ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனம் ஆகியவற்றின் விலைகளின்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 366 ரூபாவாகும்.ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.சினோபெக் வெளியிட்ட இந்த புதிய விலைகள் அடுத்த எரிபொருள் விலை திருத்தம் வரை அமுலில் இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவிக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement