• Jan 10 2025

சிவனொளிபாத மலை பருவகாலம் இன்று : பௌத்த மத துறவிகளினால் பிரித் ஓதலுடன் ஆரம்பம்

Tharmini / Dec 14th 2024, 11:13 am
image

அதிகாலை 4.40 க்கு சிவனொலிபாத மலைக்கு வாகன தொடர் அணியில் எடுத்து வரப்பட்ட சுவாமிகள் சிவனடி பாத மலைக்கு கொண்டு செல்ல பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

2024/2025 க்கான சிவனொலிபாத மலை பருவகாலம் இன்று (14) அதிகாலை வேளையில் பௌத்த மத துரவிகளினால் பிரித் ஓதும் வைபவம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 2024/2025 க்கான பருவகாலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நல்லதண்ணி நகரில் இருந்து லக்சபான இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மூலம் மலை உச்சிக்கு அலங்கரிக்க பட்ட பல்லாக்கில் சுவாமிகள் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்லபட்டது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப தினத்தன்று சுமார் 25 ஆயிரம் யாத்திரிகர்கள் வருகை தந்து இருந்தனர்.யாத்திரியர்கள் புகையிரத வழியாகவும் பேருந்துகள் மூலம் மற்றும் வாடகை வாகனங்கள் மூலம் வருகை தந்து மலைக்கு சென்று தரிசனம் செய்தனர்.

இவர்களுக்கு நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசேகர தலைமையில் முழுமையாக பாதுகாப்பு வழங்கபட்டது.

இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் இருந்து நேற்று காலை சுப வேளையில் நான்கு வழியாக கொண்டு வர பட்ட சுவாமிகள் இன்று அதிகாலை வேளையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இரத்தினபுரி காவத்தை அவிஸ்சாவலை தெகியோவிற்ற கரவனல்ல எட்டியாந்தொட்ட கித்துல்கல கினிகத்தேன வட்டவளை ஹட்டன் டிக்கோயா நோர்வூட் மஸ்கெலியா வழியாக நல்லதண்ணி வழியாக கொண்டுவரபட்ட சுவாமிகளுக்கு சகல நகரங்களிலும் வீதி ஓரங்களில் மக்கள் தரிசனம் செய்தனர்.

அத்துடன் சிற்றுண்டி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

சிவனொளிபாத மலை பருவகாலம் இன்று : பௌத்த மத துறவிகளினால் பிரித் ஓதலுடன் ஆரம்பம் அதிகாலை 4.40 க்கு சிவனொலிபாத மலைக்கு வாகன தொடர் அணியில் எடுத்து வரப்பட்ட சுவாமிகள் சிவனடி பாத மலைக்கு கொண்டு செல்ல பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.2024/2025 க்கான சிவனொலிபாத மலை பருவகாலம் இன்று (14) அதிகாலை வேளையில் பௌத்த மத துரவிகளினால் பிரித் ஓதும் வைபவம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து 2024/2025 க்கான பருவகாலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.நல்லதண்ணி நகரில் இருந்து லக்சபான இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மூலம் மலை உச்சிக்கு அலங்கரிக்க பட்ட பல்லாக்கில் சுவாமிகள் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்லபட்டது குறிப்பிடத்தக்கது.ஆரம்ப தினத்தன்று சுமார் 25 ஆயிரம் யாத்திரிகர்கள் வருகை தந்து இருந்தனர்.யாத்திரியர்கள் புகையிரத வழியாகவும் பேருந்துகள் மூலம் மற்றும் வாடகை வாகனங்கள் மூலம் வருகை தந்து மலைக்கு சென்று தரிசனம் செய்தனர்.இவர்களுக்கு நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசேகர தலைமையில் முழுமையாக பாதுகாப்பு வழங்கபட்டது.இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் இருந்து நேற்று காலை சுப வேளையில் நான்கு வழியாக கொண்டு வர பட்ட சுவாமிகள் இன்று அதிகாலை வேளையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இரத்தினபுரி காவத்தை அவிஸ்சாவலை தெகியோவிற்ற கரவனல்ல எட்டியாந்தொட்ட கித்துல்கல கினிகத்தேன வட்டவளை ஹட்டன் டிக்கோயா நோர்வூட் மஸ்கெலியா வழியாக நல்லதண்ணி வழியாக கொண்டுவரபட்ட சுவாமிகளுக்கு சகல நகரங்களிலும் வீதி ஓரங்களில் மக்கள் தரிசனம் செய்தனர்.அத்துடன் சிற்றுண்டி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement