• Dec 14 2024

கெளரவிப்பு நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாண அதிபர், ஆசிரியர்கள்- இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு..!

Sharmi / Dec 14th 2024, 11:04 am
image

கடந்த ஆண்டு க.பொ.த சா.த பரீட்சைப் பெறுபேறுகளின் படி கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில்  இது தொடர்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாக்களில் அதிபர், ஆசிரியர்கள் புறக்கணிக்கபட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் இரத்தினசேகரவின் கவனத்திற் கொண்டு வந்துள்ளார். 

ஆளுநரை நேரில் சந்தித்த அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

கடந்த காலங்களில் க.பொ.த (சா.த) பரீட்சை அடைவு மட்டத்தில் பின்னடைந்திருந்த கிழக்கு மாகாணம் கடந்த ஆண்டு 2ஆம் இடத்திற்கு முன்னேறியிருந்தது.

இதற்காக கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் மாகாணக் கல்வி அமைச்சு செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் பாராட்டுப் பத்திரம் (Commendation) வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இதேபோல  மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரினால் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாராட்டுப் பத்திரம் (Commendation)  வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

எனினும், அடைவு மட்ட அதிகரிப்புக்கு பிரதான காரணமாக இருக்கின்ற ஆசிரியர்கள், அதிபர்கள் எவரும் இது விடயத்தில் இதுவரை கௌரவிக்கப்படவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் அவர்கள் பெரிதும் மன உழைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

இது போன்ற பாரபட்சங்கள் தங்களது நிர்வாகத்தின் கீழ் இனிமேல் இடம்பெறாதிருக்கும் வகையில் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

எனவே, தயவு செய்து இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு இந்தப் பெறுபேறு விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிபர், ஆசிரியர்களையும் விரைவில் கௌரவிக்க ஏற்பாடு செய்ய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் ஆளுநரைக் கேட்டுள்ளார். 

கெளரவிப்பு நிகழ்வில் புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாண அதிபர், ஆசிரியர்கள்- இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு. கடந்த ஆண்டு க.பொ.த சா.த பரீட்சைப் பெறுபேறுகளின் படி கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில்  இது தொடர்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாக்களில் அதிபர், ஆசிரியர்கள் புறக்கணிக்கபட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் இரத்தினசேகரவின் கவனத்திற் கொண்டு வந்துள்ளார். ஆளுநரை நேரில் சந்தித்த அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த காலங்களில் க.பொ.த (சா.த) பரீட்சை அடைவு மட்டத்தில் பின்னடைந்திருந்த கிழக்கு மாகாணம் கடந்த ஆண்டு 2ஆம் இடத்திற்கு முன்னேறியிருந்தது. இதற்காக கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் மாகாணக் கல்வி அமைச்சு செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் பாராட்டுப் பத்திரம் (Commendation) வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இதேபோல  மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரினால் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாராட்டுப் பத்திரம் (Commendation)  வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.எனினும், அடைவு மட்ட அதிகரிப்புக்கு பிரதான காரணமாக இருக்கின்ற ஆசிரியர்கள், அதிபர்கள் எவரும் இது விடயத்தில் இதுவரை கௌரவிக்கப்படவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் அவர்கள் பெரிதும் மன உழைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.இது போன்ற பாரபட்சங்கள் தங்களது நிர்வாகத்தின் கீழ் இனிமேல் இடம்பெறாதிருக்கும் வகையில் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.எனவே, தயவு செய்து இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு இந்தப் பெறுபேறு விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிபர், ஆசிரியர்களையும் விரைவில் கௌரவிக்க ஏற்பாடு செய்ய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் ஆளுநரைக் கேட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement