• Dec 14 2024

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..!

Sharmi / Dec 14th 2024, 10:31 am
image

புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், பிரதேச கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அதன் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.

அதன்படி புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் ஜனவரி 27ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இலவசமாக வழங்குவதாக உறுதியளித்த பாடசாலை சீருடை துணியை சீனா உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு சில தினங்களுக்கு முன்னர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு. புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அந்தவகையில், பிரதேச கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அதன் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.அதன்படி புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் ஜனவரி 27ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு இலவசமாக வழங்குவதாக உறுதியளித்த பாடசாலை சீருடை துணியை சீனா உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு சில தினங்களுக்கு முன்னர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement