• Nov 17 2024

மொனராகலையில் திடீரென மாயமான ஆறு மாத கர்ப்பிணிப் பெண்; கணவன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

Chithra / Jul 12th 2024, 8:22 am
image


மொனராகலை, கொவிந்துபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாறை வீதியில் வசிக்கும் 6 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் கடந்த 9 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக கொவிந்துபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கர்ப்பிணிப் பெண்  கடந்த 9 ஆம் திகதி காலை 10 மணியளவில் தனது மூத்த மகளுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில், தனது தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி மூத்த மகளை மாத்திரம் வீட்டிற்கு திருப்பி   அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில்,  இந்த கர்ப்பிணிப் பெண் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது கணவர் இது தொடர்பில் கடந்த 10 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

காணாமல்போன கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் இது தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், 

எனது 6 மாத கர்ப்பிணி மனைவியின் வாட்ஸ் அப் இலக்கத்திற்கு மனைவியின் வங்கி கணக்கிற்கு 50 இலட்சம் ரூபா பணம் அனுப்புமாறும் இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்தால் மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

எனது மனைவி வயிற்றில் உள்ள கருவைக் கலைப்பதற்குப் பல முறை முயற்சி செய்திருந்தார். ஆனால் கருக்கலைப்பதற்கான காலம் தாமதமானதால் கருக்கலைப்பது கடினம் என நான் கூறினேன். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொவிந்துபுர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மொனராகலையில் திடீரென மாயமான ஆறு மாத கர்ப்பிணிப் பெண்; கணவன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் மொனராகலை, கொவிந்துபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாறை வீதியில் வசிக்கும் 6 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் கடந்த 9 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக கொவிந்துபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த கர்ப்பிணிப் பெண்  கடந்த 9 ஆம் திகதி காலை 10 மணியளவில் தனது மூத்த மகளுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில், தனது தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி மூத்த மகளை மாத்திரம் வீட்டிற்கு திருப்பி   அனுப்பி வைத்துள்ளார்.இந்நிலையில்,  இந்த கர்ப்பிணிப் பெண் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது கணவர் இது தொடர்பில் கடந்த 10 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.காணாமல்போன கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் இது தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், எனது 6 மாத கர்ப்பிணி மனைவியின் வாட்ஸ் அப் இலக்கத்திற்கு மனைவியின் வங்கி கணக்கிற்கு 50 இலட்சம் ரூபா பணம் அனுப்புமாறும் இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்தால் மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.எனது மனைவி வயிற்றில் உள்ள கருவைக் கலைப்பதற்குப் பல முறை முயற்சி செய்திருந்தார். ஆனால் கருக்கலைப்பதற்கான காலம் தாமதமானதால் கருக்கலைப்பது கடினம் என நான் கூறினேன். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கொவிந்துபுர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement