• Mar 06 2026

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் புதையல் தோண்டிய அறுவர் கைது

Chithra / Feb 15th 2026, 11:48 am
image


மொனராகலை - லுணுகலை, புளுகொல்ல பகுதியில் புதையல் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


லுணுகலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், 

புளுகொல்ல பகுதியில் உள்ள கும்பக்கன் ஓயாவை அண்மித்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


சந்தேக நபர்களிடமிருந்து அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 49 முதல் 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் லுணுகலை, எம்பிலிப்பிட்டி, பிலியந்தலை, தனமல்வில, மில்லபெத்த மற்றும் ஹொப்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சம்பவம் தொடர்பில் லுணுகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் புதையல் தோண்டிய அறுவர் கைது மொனராகலை - லுணுகலை, புளுகொல்ல பகுதியில் புதையல் தேடும் நோக்கில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லுணுகலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், புளுகொல்ல பகுதியில் உள்ள கும்பக்கன் ஓயாவை அண்மித்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 49 முதல் 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் லுணுகலை, எம்பிலிப்பிட்டி, பிலியந்தலை, தனமல்வில, மில்லபெத்த மற்றும் ஹொப்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் லுணுகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement