• Oct 28 2026

மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் - சொகுசு பேருந்தைச் சுற்றிவளைத்து நடந்தது என்ன?

Chithra / Oct 28th 2026, 2:35 pm
image


களுத்துறையில் சொகுசு பேருந்து ஒன்றை மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வழிமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கொழும்பிலிருந்து களுத்துறைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து, பயணிகளை இறக்கிவிட்டு நிறுத்துமிடத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது நேற்று (27) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர், பேருந்தை வழிமறித்து அதன் சாரதி மற்றும் நடத்துனரைத் தாக்கியுள்ளனர்.


இந்தத் தாக்குதல் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.


ஆனால், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பேருந்தில் ஏற்பட்ட தகராறு ஒன்று இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கொழும்பிலிருந்து பயணித்தபோது, மொறட்டுவைப் பகுதியில் ஒருவர் பேருந்தில் ஏறுவதற்கு நடத்துனர் அனுமதி மறுத்ததே தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.


தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது நிலைமை  கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேரையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளைக் களுத்துறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் - சொகுசு பேருந்தைச் சுற்றிவளைத்து நடந்தது என்ன களுத்துறையில் சொகுசு பேருந்து ஒன்றை மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் வழிமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கொழும்பிலிருந்து களுத்துறைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து, பயணிகளை இறக்கிவிட்டு நிறுத்துமிடத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது நேற்று (27) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர், பேருந்தை வழிமறித்து அதன் சாரதி மற்றும் நடத்துனரைத் தாக்கியுள்ளனர்.இந்தத் தாக்குதல் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.ஆனால், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பேருந்தில் ஏற்பட்ட தகராறு ஒன்று இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கொழும்பிலிருந்து பயணித்தபோது, மொறட்டுவைப் பகுதியில் ஒருவர் பேருந்தில் ஏறுவதற்கு நடத்துனர் அனுமதி மறுத்ததே தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.தாக்குதலில் காயமடைந்த நடத்துனர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது நிலைமை  கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேரையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளைக் களுத்துறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement