உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்வதற்கான சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இத்தேர்தலில் தனித்தே களமிறங்குவோம் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு மற்றும் அரசியல் குழு கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு கூடியது.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நீதிமன்ற உத்தரவுக்கமைய வெகுவிரைவில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் பலர் கட்சி மாறியுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர்.
எனவே அதே வேட்புமனுவின் கீழ் தேர்தலில் போட்டியிடுவது பொறுத்தமானதாக இருக்காது.
எனவே தற்போதைய அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி பழைய வேட்புமனுவை இரத்து செய்வதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, புதிய வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
மேலும் புதிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணியமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டோம். அதற்கமைய எமது கட்சிக்கும் தேசிய பட்டியல் ஆசனமொன்று வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கின்றோம்.
இது தொடர்பில் அந்த கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் எமக்கு அநாவசியமானவை. எனவே எமக்காக ஆசனம் எமக்கு வழங்கப்பட வேண்டும்.
அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் சுதந்திர கட்சியிலிருந்து யாரை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு அனுப்புவது என்பதை தீர்மானிப்போம். என்றார்.
ரணிலின் சிலிண்டரிடம் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை கோரும் சுதந்திரக் கட்சி உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்வதற்கான சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இத்தேர்தலில் தனித்தே களமிறங்குவோம் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு மற்றும் அரசியல் குழு கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு கூடியது. இதன்பின்னர் ஊடகங்களுக்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,நீதிமன்ற உத்தரவுக்கமைய வெகுவிரைவில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் பலர் கட்சி மாறியுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர்.எனவே அதே வேட்புமனுவின் கீழ் தேர்தலில் போட்டியிடுவது பொறுத்தமானதாக இருக்காது. எனவே தற்போதைய அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி பழைய வேட்புமனுவை இரத்து செய்வதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, புதிய வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.மேலும் புதிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணியமைத்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டோம். அதற்கமைய எமது கட்சிக்கும் தேசிய பட்டியல் ஆசனமொன்று வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கின்றோம். இது தொடர்பில் அந்த கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் எமக்கு அநாவசியமானவை. எனவே எமக்காக ஆசனம் எமக்கு வழங்கப்பட வேண்டும்.அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் சுதந்திர கட்சியிலிருந்து யாரை தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு அனுப்புவது என்பதை தீர்மானிப்போம். என்றார்.