• Dec 04 2024

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் எஸ்.எம்.நளீம்!

Chithra / Dec 3rd 2024, 10:13 am
image


 

 முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய எஸ். எம்.நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.

இதன்படி, கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், அந்த எம்பி பதவிக்கு அவரை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.

இவர் இதற்கு முன்பு ஏறாவூர் நகராட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் எஸ்.எம்.நளீம்   முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய எஸ். எம்.நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.இதன்படி, கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், அந்த எம்பி பதவிக்கு அவரை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.இவர் இதற்கு முன்பு ஏறாவூர் நகராட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement