• Sep 20 2024

ஸ்மார்ட் மின்மானி வாசிப்பு விரைவில் அறிமுகம் - சபையில் அமைச்சர் தகவல்! SamugamMedia

Tamil nila / Mar 10th 2023, 5:34 pm
image

Advertisement

ஸ்மார்ட் மின்மானி வாசிப்பு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் இதனை அறிவித்திருந்தார்.


முதலாவதாக தெஹிவளை கல்கிஸ்சை மாநகரசபை பகுதியில் இதன் முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், 31ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் முறையில் மின்சாரச் சிட்டைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, வாடிக்கையாளர் மின்சாரச் சிட்டைகளை குறுஞ்செய்தி மூலம் அனுப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.


மேலும், 2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெட்ரோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களுக்கும் இங்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்மார்ட் மின்மானி வாசிப்பு விரைவில் அறிமுகம் - சபையில் அமைச்சர் தகவல் SamugamMedia ஸ்மார்ட் மின்மானி வாசிப்பு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் இதனை அறிவித்திருந்தார்.முதலாவதாக தெஹிவளை கல்கிஸ்சை மாநகரசபை பகுதியில் இதன் முன்னோடித் திட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், 31ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் முறையில் மின்சாரச் சிட்டைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, வாடிக்கையாளர் மின்சாரச் சிட்டைகளை குறுஞ்செய்தி மூலம் அனுப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், 2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெட்ரோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களுக்கும் இங்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement