• Nov 27 2024

வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் தீர்வு!

Tamil nila / Jul 31st 2024, 10:41 pm
image

வேலையின்மையால் பாதிக்கப்பட்ட சுமார் 50,000 பட்டதாரிகள் விரக்தியில் இருப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அவர்களுக்கான தீர்வு வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

 எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று  நடைபெற்ற வேலையில்லா பட்டதாரிகளுடனான கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தார். 

 ஒவ்வொரு பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதுடன் தொழில்முனைவோராக மாற்றுவதற்கான பல்வேறு வாய்ப்புகளையும் வழங்குவதே தனது நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

 அரச நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் அச்செயற்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என குறிப்பிட்ட அவர், அதற்கு மேலதிகமாக தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் ஆரம்பிக்கப்பட்டு, அதனூடாக தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் தீர்வு வேலையின்மையால் பாதிக்கப்பட்ட சுமார் 50,000 பட்டதாரிகள் விரக்தியில் இருப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அவர்களுக்கான தீர்வு வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று  நடைபெற்ற வேலையில்லா பட்டதாரிகளுடனான கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தார்.  ஒவ்வொரு பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதுடன் தொழில்முனைவோராக மாற்றுவதற்கான பல்வேறு வாய்ப்புகளையும் வழங்குவதே தனது நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  அரச நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் அச்செயற்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் என குறிப்பிட்ட அவர், அதற்கு மேலதிகமாக தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் ஆரம்பிக்கப்பட்டு, அதனூடாக தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement