• Apr 24 2025

25 தேர்தல் வேட்பாளர்கள் கைது - உயரும் முறைப்பாடுகள்

Chithra / Apr 24th 2025, 3:42 pm
image

 

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் இரண்டு வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதன்படி, கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (24) வரையில் கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 6 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட மொத்த ஆதரவாளர்களின் எண்ணிக்கை 98ஆக அதிகரித்துள்ளது. 

நேற்றைய நாளில் மாத்திரம் தேர்தல் தொடர்பான 3 குற்றவியல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பெறப்பட்ட மொத்த குற்றவியல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 61 ஆகும்.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக நேற்று 20 முறைப்பாடுகள் கிடைத்ததோடு, மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. 

இதேவேளை, கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் 23 வாகனங்கள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


25 தேர்தல் வேட்பாளர்கள் கைது - உயரும் முறைப்பாடுகள்  தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் இரண்டு வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (24) வரையில் கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.நேற்றைய தினத்தில் மாத்திரம் 6 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட மொத்த ஆதரவாளர்களின் எண்ணிக்கை 98ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய நாளில் மாத்திரம் தேர்தல் தொடர்பான 3 குற்றவியல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெறப்பட்ட மொத்த குற்றவியல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 61 ஆகும்.தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக நேற்று 20 முறைப்பாடுகள் கிடைத்ததோடு, மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியில் 23 வாகனங்கள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement