• Nov 27 2024

ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு...! கனகராஜ் தெரிவிப்பு...!

Sharmi / Mar 28th 2024, 5:57 pm
image

நோர்வூட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நோர்வூட் ஆடை தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் நிர்க்கதியாக இருக்கும் தொழிற்சாலை ஊழியர்கள் தமது பிரச்சனைக்கு தீர்வை பெற்று தருமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இது தொடர்பில்  பிரச்சனையை ஆராய்ந்து தீர்க்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய கடந்த நான்கு மாதங்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில், இன்று நோர்வூட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் ஊதிய பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று(28)  நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் பிரதி தலைவருடன் காங்கிரசின் தொழிற்சங்க தேசிய அமைப்பாளர் லோகதாஸ் மற்றும் நோர்வுட்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ரவி குழந்தைவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஹட்டன் உதவி தொழில் ஆணையாளர் திணைக்களத்தில் உதவி தொழில் ஆணையாளர் தலைமையில்,  ஆடை தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அதன்படி டிசம்பர் மாதம் வரை ஊழியர்களுக்கு செலுத்தப்படாமல் இருந்த நிலுவை சம்பளம் சுமார் இரண்டரை கோடி ரூபா இன்று வழங்கப்பட்டது.

இதுவரை செலுத்தப்படாமல் இருக்கின்ற ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 90 மில்லியன் ரூபாய் செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது.

 அத்துடன் 5 வருடங்களுக்கு மேற்பட்ட சேவையை உடைய ஊழியர்களுக்கு அவர்களின் விண்ணப்பத்திற்கு ஏற்ப ஏப்ரல் மாதம் தொடக்கம் சேவைகால பணத் தொகையை மீள செலுத்துவதாக ஆடை தொழிற்சாலை நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது. 

அத் தொகையை தொழில் திணைக்களத்தின் ஊடாகவே செலுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறு தொழிற்சாலையை நம்பி இருக்கின்ற 800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி ஆடை தொழிற்சாலை மீள திறக்குமாறு வேண்டுகோள் விடுத்த நிலையில், எதிர்வரும் மே மாதம் ஆடை தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு தொழிற்சாலை நிர்வாகம் உத்தரவாதமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு. கனகராஜ் தெரிவிப்பு. நோர்வூட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நோர்வூட் ஆடை தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் நிர்க்கதியாக இருக்கும் தொழிற்சாலை ஊழியர்கள் தமது பிரச்சனைக்கு தீர்வை பெற்று தருமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இது தொடர்பில்  பிரச்சனையை ஆராய்ந்து தீர்க்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய கடந்த நான்கு மாதங்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில், இன்று நோர்வூட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் ஊதிய பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.இன்று(28)  நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் பிரதி தலைவருடன் காங்கிரசின் தொழிற்சங்க தேசிய அமைப்பாளர் லோகதாஸ் மற்றும் நோர்வுட்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ரவி குழந்தைவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.ஹட்டன் உதவி தொழில் ஆணையாளர் திணைக்களத்தில் உதவி தொழில் ஆணையாளர் தலைமையில்,  ஆடை தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.அதன்படி டிசம்பர் மாதம் வரை ஊழியர்களுக்கு செலுத்தப்படாமல் இருந்த நிலுவை சம்பளம் சுமார் இரண்டரை கோடி ரூபா இன்று வழங்கப்பட்டது.இதுவரை செலுத்தப்படாமல் இருக்கின்ற ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 90 மில்லியன் ரூபாய் செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. அத்துடன் 5 வருடங்களுக்கு மேற்பட்ட சேவையை உடைய ஊழியர்களுக்கு அவர்களின் விண்ணப்பத்திற்கு ஏற்ப ஏப்ரல் மாதம் தொடக்கம் சேவைகால பணத் தொகையை மீள செலுத்துவதாக ஆடை தொழிற்சாலை நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது. அத் தொகையை தொழில் திணைக்களத்தின் ஊடாகவே செலுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறு தொழிற்சாலையை நம்பி இருக்கின்ற 800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி ஆடை தொழிற்சாலை மீள திறக்குமாறு வேண்டுகோள் விடுத்த நிலையில், எதிர்வரும் மே மாதம் ஆடை தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு தொழிற்சாலை நிர்வாகம் உத்தரவாதமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement