நாட்டின் 8ற்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்று சூரியன் நேரடியாகத் தாக்கவுள்ளதால் அப்பகுதியில் வெப்பநிலை உச்சத்தைத் தொடவுள்ளது.
இன்று பிற்பகல் 12.10 மணியளவில் இலங்கையின் எட்டு (08) நகரங்களுக்கு மேல் சூரியன் நேரடியாகப் பொருந்தும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வானிலை ஆய்வுத்துறை மேலும் தெரிவிக்கையில்,
இன்று சூரியன் மேலே இருக்கும். இதனால் இலங்கைக்கு மிக அருகில் உள்ள பகுதிகளான ஆண்டிகம, பலல்ல, மிகஸ்வெவ, பம்பரகஸ்வெவ, பக்கமுன, அரலகங்வில, செங்கலடி மற்றும் ஏறாவூர் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை உச்சத்தை எட்டவுள்ளது.
தெற்கு நோக்கிய வெளிப்படையான ஒப்பீட்டு இயக்கம் காரணமாக, செப்டம்பர் 07 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும்.
எனவே வெப்பநிலை காலநிலைக்கேற்ப குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள மக்களைக் கவனமாக இருக்குமாறு வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் உச்சமடையும் வெப்பநிலை;செப்டெம்பர் 7 வரை நேரடியாகத் தாக்கும் நாட்டின் 8ற்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்று சூரியன் நேரடியாகத் தாக்கவுள்ளதால் அப்பகுதியில் வெப்பநிலை உச்சத்தைத் தொடவுள்ளது. இன்று பிற்பகல் 12.10 மணியளவில் இலங்கையின் எட்டு (08) நகரங்களுக்கு மேல் சூரியன் நேரடியாகப் பொருந்தும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பில் வானிலை ஆய்வுத்துறை மேலும் தெரிவிக்கையில், இன்று சூரியன் மேலே இருக்கும். இதனால் இலங்கைக்கு மிக அருகில் உள்ள பகுதிகளான ஆண்டிகம, பலல்ல, மிகஸ்வெவ, பம்பரகஸ்வெவ, பக்கமுன, அரலகங்வில, செங்கலடி மற்றும் ஏறாவூர் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை உச்சத்தை எட்டவுள்ளது. தெற்கு நோக்கிய வெளிப்படையான ஒப்பீட்டு இயக்கம் காரணமாக, செப்டம்பர் 07 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும்.எனவே வெப்பநிலை காலநிலைக்கேற்ப குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள மக்களைக் கவனமாக இருக்குமாறு வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.