நான் திருகோணமலை மக்களுக்கு நன்கு பரீட்சயமானவன். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 13500 வாக்குகளை பெற்றவன். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்கின்ற வகையில் மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்தவன். ஆகவே மக்கள் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் எனக்கொரு சந்தர்ப்பத்தை தரவேண்டுமென தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் கந்தசாமி ஜீவரூன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் கந்தசாமி ஜீவரூபன் (ஜீவா மாஸ்டர்) சமய வழிபாடுகளுடன் மூதூர் -பாரதிபுரத்தில் வீட்டுக் வீடு தேர்தல் பிரச்சாரத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை (27) ஆரம்பித்தார். இதன்போது மூதூர்-பாரதிபுரம் நாக லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்த அவர்
எமது பிரதேசத்தில் பல்வேறு பிரச்சினைகள் தேங்கிக் கிடக்கின்றன. முன்னால் போராளிகளின் பிரச்சினை, பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிரச்சினைகள் , சிறார்களின் பிரச்சினைகள் என பல பிரச்சினைகள் குறிப்பாக கிராமங்களில் காணப்படுகின்றன.
திருகோணமலையில் அரசியலில் மக்களுக்கான இடைவெளி அதிகரித்துவிட்டது. மக்களின் பிரச்சினைகள் இதனால் தேங்கிக் காணப்படுகின்றன. மூதூரைச் சேர்ந்த தங்கத்துரை எம்.பி யின் மறைவுக்கு பின்னர் தேசியத்தை நேசிக்கின்ற எவரும் உருவாகவில்லை. அந்த இடைவெளி இன்னும் நிரப்பப்படவில்லை என்பது கவலையான விடயம்.
நிற்கின்ற 7 வேட்பாளர்களில் யார் மக்களோடு நிற்பார்கள் என்று கருதுகின்றீர்களோ அவர்களை நீங்கள் தெரிவு செய்யுங்கள். அது உங்களது ஜனநாயக உரிமையாகும்.
தற்போது தமிழ் தேசியத்தை சிங்களத் தேசியத்தோடு கரைத்து விடுகின்ற செயற்பாட்டில் சிலர் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேசிய கட்சிகள் ஊடாக எமது இளைஞர்களை வளைத்துப்போட சதிகள் இடம்பெறுகின்றன. இந்த மாயை வலை, தேர்தல் முடிந்த பின்னர் நீக்கப்பட்டு விடும். அதற்கு பிறகு நீங்கள் முட்டிமோதி நிற்பீர்கள்.
ஜனநாய ஆயுதமான வாக்கினை சரியாக பயன்படுத்துங்கள் பிறகு கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. பணம் கொடுப்பவர்களின் பக்கம் சென்று மக்கள் தவிறிழைத்து விட்டு பின்னர் கவலைப்படுவதில் அர்த்தமில்லை .
தமிழ் தேசியத்தை சிங்களத் தேசியத்தோடு கரைத்து விடுகின்ற செயற்பாட்டில் சிலர் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் - ஜீவரூன் நான் திருகோணமலை மக்களுக்கு நன்கு பரீட்சயமானவன். கடந்த பாராளுமன்ற தேர்தலில் 13500 வாக்குகளை பெற்றவன். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்கின்ற வகையில் மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்தவன். ஆகவே மக்கள் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் எனக்கொரு சந்தர்ப்பத்தை தரவேண்டுமென தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் கந்தசாமி ஜீவரூன் தெரிவித்தார்.இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் கந்தசாமி ஜீவரூபன் (ஜீவா மாஸ்டர்) சமய வழிபாடுகளுடன் மூதூர் -பாரதிபுரத்தில் வீட்டுக் வீடு தேர்தல் பிரச்சாரத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை (27) ஆரம்பித்தார். இதன்போது மூதூர்-பாரதிபுரம் நாக லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்த அவர்எமது பிரதேசத்தில் பல்வேறு பிரச்சினைகள் தேங்கிக் கிடக்கின்றன. முன்னால் போராளிகளின் பிரச்சினை, பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் பிரச்சினைகள் , சிறார்களின் பிரச்சினைகள் என பல பிரச்சினைகள் குறிப்பாக கிராமங்களில் காணப்படுகின்றன.திருகோணமலையில் அரசியலில் மக்களுக்கான இடைவெளி அதிகரித்துவிட்டது. மக்களின் பிரச்சினைகள் இதனால் தேங்கிக் காணப்படுகின்றன. மூதூரைச் சேர்ந்த தங்கத்துரை எம்.பி யின் மறைவுக்கு பின்னர் தேசியத்தை நேசிக்கின்ற எவரும் உருவாகவில்லை. அந்த இடைவெளி இன்னும் நிரப்பப்படவில்லை என்பது கவலையான விடயம்.நிற்கின்ற 7 வேட்பாளர்களில் யார் மக்களோடு நிற்பார்கள் என்று கருதுகின்றீர்களோ அவர்களை நீங்கள் தெரிவு செய்யுங்கள். அது உங்களது ஜனநாயக உரிமையாகும்.தற்போது தமிழ் தேசியத்தை சிங்களத் தேசியத்தோடு கரைத்து விடுகின்ற செயற்பாட்டில் சிலர் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேசிய கட்சிகள் ஊடாக எமது இளைஞர்களை வளைத்துப்போட சதிகள் இடம்பெறுகின்றன. இந்த மாயை வலை, தேர்தல் முடிந்த பின்னர் நீக்கப்பட்டு விடும். அதற்கு பிறகு நீங்கள் முட்டிமோதி நிற்பீர்கள்.ஜனநாய ஆயுதமான வாக்கினை சரியாக பயன்படுத்துங்கள் பிறகு கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. பணம் கொடுப்பவர்களின் பக்கம் சென்று மக்கள் தவிறிழைத்து விட்டு பின்னர் கவலைப்படுவதில் அர்த்தமில்லை .