• Apr 02 2025

தேர்தல் சட்டங்களை அலட்சியம் செய்யும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் - பெப்ரல் குற்றச்சாட்டு

Chithra / Sep 13th 2024, 12:13 pm
image

 

பொலிஸ் தலைமையகத்தை சேர்ந்த சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை புறக்கணிக்கின்றனர் என பெப்ரல் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பிற்கு முன்னதாக நாட்டில் பொலிஸ்மா அதிபரோ அல்லது பதில் பொலிஸ்மா அதிபரோ இல்லாத போதிலும் பொலிஸார் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்றுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல்,

சில அதிகாரிகள் தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுவது குறித்து கரிசனை வெளியிட்டுள்ளது.

பதுளை, வவுனியாவின் பொலிஸ் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள்  தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுகின்றனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தேசிய பொலிஸ்  ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்துள்ளார்.

வவுனியாவின் பொலிஸ் தலைமையகத்தின் தலைமை பொலிஸ் பரிசோதகர் சட்டவிரோத சுவரொட்டிகள் போன்றவற்றை அகற்றுவது குறித்து அக்கறை காட்டவில்லை, தேர்தல் அதிகாரிகளின் உத்தரவுகளை அலட்சியம் செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை அலட்சியம் செய்யும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் - பெப்ரல் குற்றச்சாட்டு  பொலிஸ் தலைமையகத்தை சேர்ந்த சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை புறக்கணிக்கின்றனர் என பெப்ரல் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பிற்கு முன்னதாக நாட்டில் பொலிஸ்மா அதிபரோ அல்லது பதில் பொலிஸ்மா அதிபரோ இல்லாத போதிலும் பொலிஸார் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்றுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல்,சில அதிகாரிகள் தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுவது குறித்து கரிசனை வெளியிட்டுள்ளது.பதுளை, வவுனியாவின் பொலிஸ் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள்  தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுகின்றனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தேசிய பொலிஸ்  ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்துள்ளார்.வவுனியாவின் பொலிஸ் தலைமையகத்தின் தலைமை பொலிஸ் பரிசோதகர் சட்டவிரோத சுவரொட்டிகள் போன்றவற்றை அகற்றுவது குறித்து அக்கறை காட்டவில்லை, தேர்தல் அதிகாரிகளின் உத்தரவுகளை அலட்சியம் செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement