• Nov 07 2025

யாழில் சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம்

Chithra / Oct 7th 2025, 1:52 pm
image

  

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றி வந்த சிலருக்கு, பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளுக்கே இவ்வாறு பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பொறுப்பதிகாரிகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பிரதம இன்ஸ்பெக்டர் உட்பட 32 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இடமாற்றங்களின் விளைவாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிகளை வகித்த 10 அதிகாரிகள் தங்கள் பொறுப்பதிகாரி பதவிகளை இழந்துள்ளனர்.

குறித்த 10 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல் 12 அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பதிகாரி பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

யாழில் சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பதவி இறக்கத்துடன் இடமாற்றம்   யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றி வந்த சிலருக்கு, பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளுக்கே இவ்வாறு பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.குறித்த பொறுப்பதிகாரிகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை பிரதம இன்ஸ்பெக்டர் உட்பட 32 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த இடமாற்றங்களின் விளைவாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிகளை வகித்த 10 அதிகாரிகள் தங்கள் பொறுப்பதிகாரி பதவிகளை இழந்துள்ளனர்.குறித்த 10 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இதேபோல் 12 அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பதிகாரி பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement