• Nov 22 2024

சில தரப்பு ஏமாற்று அரசியல் நாடகங்களை தயாரித்து வருகின்றனர்- எதிர்க்கட்சித் தலைவர்..!Samugammedia

Tamil nila / Dec 21st 2023, 10:04 pm
image

நாட்டின் வாழ்வாதாரம் சீர்குலைந்து, பொருளாதாரம் வங்குரோத்தாகியுள்ள இந்நேரத்தில், சில தரப்பு ஏமாற்று அரசியல் நாடகங்களை தயாரித்து வருகின்றனர் என்றும், வரவு செலவுத் திட்டத்திற்கும், VAT வரியை அதிகரிப்பதற்கும் ஆதரவாக வாக்களித்து விட்டு, ஜனாதிபதியை பாதுகாத்துக் கொண்டும், வரிச் சுமையை மக்களின் தோள்களில் சுமத்த வேண்டாம். என பின்னர் அறிக்கைகளை வெளியிடுவதே அண்மைய பெரும் நகைச்சுவையான விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

VAT வரியை அதிகரிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது நாட்டை வங்குரோத்தடையச் செய்த குடும்ப ஆட்சியின் ஒரு தரப்பினர் அதற்கு வாக்களிக்காமல், மக்கள் பக்கம் முன் நிற்பதாக பாசாங்கு செய்தாலும், தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்கள் VAT வரியை அதிகரிக்க ஆதரவாக வாக்களித்தனர்.

நாட்டையே வங்குரோத்தாக்கி, நாட்டை நாசமாக்கிய இவர்கள், ஏமாற்றுத் தனமான செயற்பாடுகள் மூலம் மக்கள் அவதானங்களை திசை திருப்ப மீண்டும் முயற்சித்து வருகின்றனர் என்றும், இவர்களின் இந்த போலியான செயற்பாடுகளை கண்டு ஏமாற வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சில தரப்பு ஏமாற்று அரசியல் நாடகங்களை தயாரித்து வருகின்றனர்- எதிர்க்கட்சித் தலைவர்.Samugammedia நாட்டின் வாழ்வாதாரம் சீர்குலைந்து, பொருளாதாரம் வங்குரோத்தாகியுள்ள இந்நேரத்தில், சில தரப்பு ஏமாற்று அரசியல் நாடகங்களை தயாரித்து வருகின்றனர் என்றும், வரவு செலவுத் திட்டத்திற்கும், VAT வரியை அதிகரிப்பதற்கும் ஆதரவாக வாக்களித்து விட்டு, ஜனாதிபதியை பாதுகாத்துக் கொண்டும், வரிச் சுமையை மக்களின் தோள்களில் சுமத்த வேண்டாம். என பின்னர் அறிக்கைகளை வெளியிடுவதே அண்மைய பெரும் நகைச்சுவையான விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.VAT வரியை அதிகரிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது நாட்டை வங்குரோத்தடையச் செய்த குடும்ப ஆட்சியின் ஒரு தரப்பினர் அதற்கு வாக்களிக்காமல், மக்கள் பக்கம் முன் நிற்பதாக பாசாங்கு செய்தாலும், தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்கள் VAT வரியை அதிகரிக்க ஆதரவாக வாக்களித்தனர்.நாட்டையே வங்குரோத்தாக்கி, நாட்டை நாசமாக்கிய இவர்கள், ஏமாற்றுத் தனமான செயற்பாடுகள் மூலம் மக்கள் அவதானங்களை திசை திருப்ப மீண்டும் முயற்சித்து வருகின்றனர் என்றும், இவர்களின் இந்த போலியான செயற்பாடுகளை கண்டு ஏமாற வேண்டாம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement