• Dec 09 2024

உணவுக்காக பலாப்பழம் பறித்த தாயை கொடூரமாக தாக்கிய மகன்; மனைவி, குழந்தையுடன் தலைமறைவு

Chithra / Jul 1st 2024, 3:11 pm
image

மொனராகலை, தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெரலி கசாய பிரதேசத்தில் உணவுக்காக பலாப்பழம் பறித்த தாய் ஒருவரை அவரது இளைய மகன் கொடூரமாக தாக்கியுள்ளார்.

தாக்குதலால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால், குறித்த தாய் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலைச் மேற்கொண்ட சந்தேகநபரான மகன் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

பெற்றோர்களின் செந்த வீடு, காணி என்பவற்றை தனது பெயரில் எழுதி வாங்கிக்கொண்டதால் அவர்கள் சிறிய வீட்டை கட்டி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இரவு உணவிற்காக காணிக்கு அருகாமையிலுள்ள பலா மரத்தில் பழம் பறிக்க முற்பட்டபோது மகன் தனது தாயை மின்விளக்கினால் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைதுசெய்வதற்காக தொம்பகஹவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


உணவுக்காக பலாப்பழம் பறித்த தாயை கொடூரமாக தாக்கிய மகன்; மனைவி, குழந்தையுடன் தலைமறைவு மொனராகலை, தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெரலி கசாய பிரதேசத்தில் உணவுக்காக பலாப்பழம் பறித்த தாய் ஒருவரை அவரது இளைய மகன் கொடூரமாக தாக்கியுள்ளார்.தாக்குதலால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால், குறித்த தாய் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இத்தாக்குதலைச் மேற்கொண்ட சந்தேகநபரான மகன் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.பெற்றோர்களின் செந்த வீடு, காணி என்பவற்றை தனது பெயரில் எழுதி வாங்கிக்கொண்டதால் அவர்கள் சிறிய வீட்டை கட்டி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.இரவு உணவிற்காக காணிக்கு அருகாமையிலுள்ள பலா மரத்தில் பழம் பறிக்க முற்பட்டபோது மகன் தனது தாயை மின்விளக்கினால் தாக்கியுள்ளார்.இந்நிலையில் தலைமறைவாகியுள்ள சந்தேக நபரை கைதுசெய்வதற்காக தொம்பகஹவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement