• Jul 03 2024

சுவிஸ் - புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு

Chithra / Jul 1st 2024, 3:25 pm
image

Advertisement

சுவிட்சர்லாந்து - புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 2024 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகசபை தெரிவிற்கான கூட்டம் 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை 11.00 மணியளவில் பேர்ன்மாநிலம் புர்க்டோர்வ் நகரில் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் சொக்க லிங்கம் ரஞ்சன்  தலைமையில் நடைபெற்றது. 

அமைதி வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு செயலாளர் அறிக்கை, பொருளாளர் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு முன்பு, வந்திருந்த உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டுமென்றும் தலைவர் பொறுப்பில் ஒருவர் ஒருமுறை மாத்திரமே இரண்டு ஆண்டு கால நிர்வாகத்தில் தலைமை பொறுப்பில் இருக்க முடியுமெனவும், ஏனைய பொறுப்புக்களை வகிப்போர் மறுபடி தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அப்பொறுப்புக்களை மீளவும் வகிக்கமுடியும் எனவும் முக்கியமான, ஏகமனதான தீர்மானமாகவும்

நிறைவேற்றப்பட்டது.

இதன் அடிப்படையில் புதிய தலைவராக புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த திரு சுப்பையாவடிவேலுவும், செயலாளராக புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தினை சேர்ந்த நவரெத்தினம் சிவானந்தனும் பொருளாளராக புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தினை சேர்ந்த சதானந்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.

சுவிஸ் - புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு சுவிட்சர்லாந்து - புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 2024 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகசபை தெரிவிற்கான கூட்டம் 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை 11.00 மணியளவில் பேர்ன்மாநிலம் புர்க்டோர்வ் நகரில் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் சொக்க லிங்கம் ரஞ்சன்  தலைமையில் நடைபெற்றது. அமைதி வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு செயலாளர் அறிக்கை, பொருளாளர் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டு புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு முன்பு, வந்திருந்த உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டுமென்றும் தலைவர் பொறுப்பில் ஒருவர் ஒருமுறை மாத்திரமே இரண்டு ஆண்டு கால நிர்வாகத்தில் தலைமை பொறுப்பில் இருக்க முடியுமெனவும், ஏனைய பொறுப்புக்களை வகிப்போர் மறுபடி தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அப்பொறுப்புக்களை மீளவும் வகிக்கமுடியும் எனவும் முக்கியமான, ஏகமனதான தீர்மானமாகவும்நிறைவேற்றப்பட்டது.இதன் அடிப்படையில் புதிய தலைவராக புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த திரு சுப்பையாவடிவேலுவும், செயலாளராக புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தினை சேர்ந்த நவரெத்தினம் சிவானந்தனும் பொருளாளராக புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தினை சேர்ந்த சதானந்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement