• May 06 2025

இரும்பு கம்பியால் தந்தையை தாக்கி கொன்ற மகன்; இலங்கையில் பயங்கரம்

Chithra / May 6th 2025, 2:18 pm
image

  

கலேவெல, மகுலுகஸ்வெவ பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மகன் இரும்பு கம்பியால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கலேவெல, மகுலுகஸ்வெவ நான்காம் மைல்கல் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சமன் பிரியந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையை மறைக்க நேற்று (05) இரவு முதல் இன்று காலை வரை மகன் பல திட்டங்களை வகுத்து வந்துள்ளார். 

மேலும் அண்டை வீட்டுப் பெண் ஒருவரிடம் அவர் உதவி கேட்ட பிறகு, குடியிருப்பாளர்கள் இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இறந்தவரின் மனைவியும் அவரின் மகனும் இந்த வீட்டில் வசித்து வந்ததாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். 

தந்தையைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இரும்பு கம்பியால் தந்தையை தாக்கி கொன்ற மகன்; இலங்கையில் பயங்கரம்   கலேவெல, மகுலுகஸ்வெவ பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மகன் இரும்பு கம்பியால் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.கலேவெல, மகுலுகஸ்வெவ நான்காம் மைல்கல் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சமன் பிரியந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கொலையை மறைக்க நேற்று (05) இரவு முதல் இன்று காலை வரை மகன் பல திட்டங்களை வகுத்து வந்துள்ளார். மேலும் அண்டை வீட்டுப் பெண் ஒருவரிடம் அவர் உதவி கேட்ட பிறகு, குடியிருப்பாளர்கள் இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.இறந்தவரின் மனைவியும் அவரின் மகனும் இந்த வீட்டில் வசித்து வந்ததாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். தந்தையைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement