இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.
இதன்படி போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாப்பிரிக்க அணி இன்றைய 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் டெம்பா பவுமா 48 ஓட்டங்களையும், ட்ரிஸ்பன் ஸ்டப்ஸ் 36 ஓட்டங்களையும் பெற்று களத்தில் உள்ளனர்.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், தென்னாப்பிரிக்க அணி முதலாவது இன்னிங்ஸில் 358 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தநிலையில் தென்னாப்பிரிக்க அணி 221 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.
போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி 221 ஓட்டங்களினால் முன்னிலை இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இதன்படி போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாப்பிரிக்க அணி இன்றைய 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் டெம்பா பவுமா 48 ஓட்டங்களையும், ட்ரிஸ்பன் ஸ்டப்ஸ் 36 ஓட்டங்களையும் பெற்று களத்தில் உள்ளனர். முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், தென்னாப்பிரிக்க அணி முதலாவது இன்னிங்ஸில் 358 ஓட்டங்களைக் குவித்தது. இந்தநிலையில் தென்னாப்பிரிக்க அணி 221 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.