பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தென்கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களிடையே கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதால், போதைப்பொருள் பயன்பாடு, குற்றச்சம்பவங்கள், ஒன்லைன் விளையாட்டுகள் போன்ற பல்வேறு வலைகளில் மாணவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.
இதனை நிவர்த்தி செய்ய மாணவர்களிடையே கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைக்கு அமைய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இங், பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை செய்யும் நடைமுறையை நேற்று (27) பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.
குறித்த அறிக்கைக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவித்ததையடுத்து, தென்கொரியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் (மார்ச் 2026) பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை; தென்கொரிய அரசாங்கம் அதிரடி பாடசாலைகளில் மாணவர்கள் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தென்கொரிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களிடையே கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதால், போதைப்பொருள் பயன்பாடு, குற்றச்சம்பவங்கள், ஒன்லைன் விளையாட்டுகள் போன்ற பல்வேறு வலைகளில் மாணவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.இதனை நிவர்த்தி செய்ய மாணவர்களிடையே கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைக்கு அமைய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இங், பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை செய்யும் நடைமுறையை நேற்று (27) பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். குறித்த அறிக்கைக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவித்ததையடுத்து, தென்கொரியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் (மார்ச் 2026) பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.