• Jul 03 2024

தென்மேற்கு பருவநிலை தீவிரம் - வானிலை குறித்து 24 மணி நேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

Chithra / Jul 1st 2024, 7:20 am
image

Advertisement

  

பலத்த காற்று மற்றும் கடல் ​கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, அரபிக் கடல் பகுதியில் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தை அவதானமாக செயற்படுமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவநிலை தீவிரமாக இருப்பதால் அரபிக் கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்று இடைக்கிடையில் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு பருவநிலை தீவிரம் - வானிலை குறித்து 24 மணி நேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை   பலத்த காற்று மற்றும் கடல் ​கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.இதன்படி, அரபிக் கடல் பகுதியில் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தை அவதானமாக செயற்படுமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.தென்மேற்கு பருவநிலை தீவிரமாக இருப்பதால் அரபிக் கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்று இடைக்கிடையில் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement