• Sep 21 2024

ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீள இணைக்க விஷேட நடவடிக்கை! samugammedia

Tamil nila / Aug 11th 2023, 9:56 pm
image

Advertisement

ஆசிரியர் துறையிலியிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கு மீளவும் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்குமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் மாகாண சபைகளில் உள்ளதால் அந்த குழுவை இணைத்துக் கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் மாகாண சபைகளுக்கு அறிவிக்கப்படும் எனவும், இந்த ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டால் ஆசிரியர் பற்றாக்குறை ஓரளவு தவிர்க்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இவர்கள் அனைவரும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பின்னரும் 26,000 வெற்றிடங்கள் காணப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.


ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீள இணைக்க விஷேட நடவடிக்கை samugammedia ஆசிரியர் துறையிலியிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளுக்கு மீளவும் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்குமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இந்த வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம் மாகாண சபைகளில் உள்ளதால் அந்த குழுவை இணைத்துக் கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,“அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் மாகாண சபைகளுக்கு அறிவிக்கப்படும் எனவும், இந்த ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டால் ஆசிரியர் பற்றாக்குறை ஓரளவு தவிர்க்கப்படும் எனவும் தெரிவித்தார்.எவ்வாறாயினும், இவர்கள் அனைவரும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பின்னரும் 26,000 வெற்றிடங்கள் காணப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement