• Feb 10 2025

புத்தாண்டுக்காக அரச அதிகாரிகளுக்கு விசேட முற்பணம்

Chithra / Dec 29th 2024, 7:51 am
image


அடுத்த வருடத்திற்கு அரச அதிகாரிகளுக்கு 4000 ரூபாவிற்கு மிகாமல் விசேட முற்பணமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த முற்பணத் தொகை எதிர்கால சம்பளத்தில் கழிக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த முன்பணம் ஜனவரி 1ம் திகதி முதல் பெப்ரவரி 28ம் திகதிக்குள் செலுத்தப்பட உள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகள் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களினால் மேற்கொள்ளப்படும்.

புத்தாண்டுக்காக அரச அதிகாரிகளுக்கு விசேட முற்பணம் அடுத்த வருடத்திற்கு அரச அதிகாரிகளுக்கு 4000 ரூபாவிற்கு மிகாமல் விசேட முற்பணமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்த முற்பணத் தொகை எதிர்கால சம்பளத்தில் கழிக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.அதன்படி, இந்த முன்பணம் ஜனவரி 1ம் திகதி முதல் பெப்ரவரி 28ம் திகதிக்குள் செலுத்தப்பட உள்ளது.இது தொடர்பான நடவடிக்கைகள் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களினால் மேற்கொள்ளப்படும்.

Advertisement

Advertisement

Advertisement