• Nov 25 2024

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

Tamil nila / Mar 1st 2024, 6:29 pm
image

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில்  2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2024ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அத்துடன் 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2024 செப்டம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024  நவம்பர் 25 ஆம் திகதி முதல் 2024  டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான உத்தேச திகதிகள் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.





பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்நிலையில்  2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2024ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.அத்துடன் 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2024 செப்டம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024  நவம்பர் 25 ஆம் திகதி முதல் 2024  டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான உத்தேச திகதிகள் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement