• Feb 14 2026

O/L பரீட்சார்த்திகளுக்கான ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

shanuja / Feb 13th 2026, 5:18 pm
image

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்காக ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 


ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk என்ற தளத்திற்குச் சென்று, குறித்த விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஏதேனும் பரீட்சார்த்திகள் இருப்பின், அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மாத்திரம் நாளை (14) சனிக்கிழமை ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலக கிளைகளை முற்பகல் 08.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை திறந்து வைக்கவும் அத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின், அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரினால் சான்றளிக்கப்பட்ட, முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களுடன் வருகை தருமாறு அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

O/L பரீட்சார்த்திகளுக்கான ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்காக ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk என்ற தளத்திற்குச் சென்று, குறித்த விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேனும் பரீட்சார்த்திகள் இருப்பின், அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மாத்திரம் நாளை (14) சனிக்கிழமை ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலக கிளைகளை முற்பகல் 08.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை திறந்து வைக்கவும் அத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின், அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரினால் சான்றளிக்கப்பட்ட, முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய ஆவணங்களுடன் வருகை தருமாறு அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement