• Dec 24 2024

ஜனவரி முதல் வாரத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து வரவுள்ள விசேட அறிவிப்பு

Chithra / Dec 23rd 2024, 8:16 am
image


ஜனவரி முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதை வரவேற்கிறோம்.

அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலத்தில் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் நிதி மற்றும் இதர காரணிகளால் திட்டமிட்டதற்கமைய தேர்தலை நடத்த முடியாமல் போனது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து உறுதியான தீர்மானத்தை அறிவிப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.இதற்கமைய ஜனவரி முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அறிவிப்போம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களை கோரும் வகையில் சட்டமூலத்தை ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதமளவில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் பெப்ரவரி மாதமளவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

ஜனவரி முதல் வாரத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து வரவுள்ள விசேட அறிவிப்பு ஜனவரி முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதை வரவேற்கிறோம்.அரசியலமைப்பின் பிரகாரம் உரிய காலத்தில் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் நிதி மற்றும் இதர காரணிகளால் திட்டமிட்டதற்கமைய தேர்தலை நடத்த முடியாமல் போனது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து உறுதியான தீர்மானத்தை அறிவிப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.இதற்கமைய ஜனவரி முதல் வாரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அறிவிப்போம்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களை கோரும் வகையில் சட்டமூலத்தை ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதமளவில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் பெப்ரவரி மாதமளவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement